டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க தனது சொகுசு ஓட்டலை வழங்கிய பிரபல நடிகர்!
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தங்களது உயிரை பணையம் வைத்து பணிசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இதனையடுத்து, பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மக்கள் உயிரை காப்பாற்ற இரவும்-பகலும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் என்னால் இயன்ற உதவியாக இதை செய்துள்ளேன்.’ என்று கூறியுள்ளார்.