புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜீலை காற்றில் படக்குழுவினர் நிதி உதவி வழங்கினார்கள்!!!! !!!!
- காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில்.
- இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில்.இந்த படத்தை அறிமுக இயக்குநர் கே சி சுந்தரம் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் ஆவார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கு நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியிட்டு விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி, இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, இயக்குனர் கே சி சுந்தரம், இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.