குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சபாபதி எதற்கும் துணிந்தவன், யானை, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது “மிஸ்டர் ஜூ கீப்பர்” (Mr. Zoo Keeper)” எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- 100 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்.! வெளியான சூப்பர் தகவல்.!
இதற்கிடையில், புகழ் தனது காதலியான பென்சியாவை கடந்த மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். முக்கியமான பிரபலங்கள் மற்றும் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். திருமணத்தை தொடர்ந்து புகழ் படங்களின் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனையடுத்து, எப்போதும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு வரும் புகழ் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம் செய்தபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…