jayam ravi iraivan [file image]
ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 பாகங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட அவர் தனி ஹீரோவாக அந்த படத்தில் நடிக்கவில்லை பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அவர் தனியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் என்றால் கோமாளி படம் தான்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்த பூமி, அகிலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இறைவன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கூறும் போதே ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டதாம்.
எனவே, அதன் காரணமாக தான் அவர் இந்த திரைப்படத்திலும் நடிக்கவும் கமிட் ஆனாராம். கண்டிப்பாக இந்த திரைப்படம் வெற்றிபெறும் என ஜெயம் ரவி எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. படத்திற்கான ட்ரைலர் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
ஆனால், படம் மக்களுக்கு பெரிய அளவில் திருப்தி கொடுக்காத காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். இப்படியான ஒரு சமயத்தில் தான் அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.
அந்த கதை மிகவும் அருமையாக இருந்ததாம். ஆனால், பட்ஜெட் மிகவும் பெரிதாக வரும் என்பதால் ஜெயம் ரவி யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு எனும் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படத்தை இயக்கினால் கண்டிப்பா ஹிட் ஆகா வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இறைவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல சைரன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…