நிச்சயதார்த்தம் , திருமணம் விரைவில் நடக்கும் !!நடிகர் விஷால்
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க வேலைகளில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். தற்போது சன் டிவியில் சன் நாம்ஒருவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். ஐதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது .
இது குறித்து விஷாலிடம் கேட்ட போது நான் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எங்களின் திருமணம் காதல் திருமணம் இல்லை இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்.மேலும் நிச்சயதார்த்தம் எதுவும் இன்னும் நடைபெறவில்லை.
குடும்பத்தினர் நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை இன்னும் முடிவு செய்யவில்லை மற்றும் திருமணம் பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.மேலும் நடிகர் விஷால் கூறுகையில் நான், ஏற்கெனவே கூறியபடி ‘ நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் ‘ என்று கூறினார்.