இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

RohiniTheatre

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோஹிணி திரையரங்கில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிணி தியேட்டர் 

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரு படம் வெளியானால் அந்த படத்தை பார்க்க செல்லும் திரையரங்கு ரோஹிணி தான். ஏனென்றால், ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்க்கவேண்டும் என்றால் இந்த திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்காக இரவே சென்று கூட்டமாக திரையரங்கு வாசலிலில் நடனம் ஆடி ஸ்பீக்கர்கள் வைத்து கொண்டாடுவார்கள்.

லியோ திரையிடப்படாது 

பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி ஒளிபரப்பும் ரோஹிணி தியேட்டர் இந்த முறை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (அக்டோபர் 19) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, படத்தை ரோஹிணி  திரையரங்கில் கொண்டாடி தீர்க்கலாம் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது “லியோ படம் இங்கு திரையிடப்படாது” என்ற பதாகையை திரையரங்கு வாசலில் வைத்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.

காரணம்? 

மேலும், திடிரென கடைசி நேரத்தில் ரோஹிணி  திரையரங்கில் ‘லியோ’ படம் வெளியாகாது  என அறிவிக்க காரணம் என்னவென்றால் லியோ படத்தின் டிரைலர் கடந்த 5-ஆம் தேதி வெளியாகும் போது படத்தின் ட்ரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கில் அமைந்திருந்த இருக்கைகள் அனைத்தையும் உடைத்து சேத படுத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த நிலையில், விஜய் திரையரங்கு உரிமையாளரை நேரில் அழைத்து பேசினார். இருப்பினும், இருக்கைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, படம் வெளியானால் அதனை பார்க்க வருபவர்களும் இப்படி செய்யலாம் என்பதால் ரோஹிணி  திரையரங்கு லியோ படத்தை வெளியிடாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இனிமே ட்ரைலர் கிடையாது 

மேலும், திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்  அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson