கொடைக்கானலுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் கேரளாவின் மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் துளைந்துவிட, அவரை நண்பர்கள் தேடும் சர்வைவல் த்ரில்லர் கதையம்சத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 7 நாட்களிலே உலகம் முழுவதும் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னையில் கமல்ஹாசனை சந்தித்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் நேரில் அழைத்து படத்தினை பாராட்டி பேசி உள்ளார். அதைப்போல குணா திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் சந்தான பாரதியும் உடன் இருந்தார்.
கமல்ஹாசனை சந்தித்தபிறகு பேசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரம் பேசியதாவது ” நான் கமல்ஹாசன் சாரின் திவீர ரசிகர். அவரை பார்த்ததை என்னால் இன்னுமே நம்பவே முடியவில்லை. இப்போது தான் நான் என்னுடைய படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவடைந்ததாக நினைக்கிறன். குணா படம் மற்றும் கமல்சார் இல்லை என்றால் கண்டிப்பாக ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வந்திருக்காது.
படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் சார் படம் நன்றாக இருப்பதாக கூறினார். படம் அவருக்கு ரொம்பவே பிடித்திருப்பதாக கூறினார். அவரை போல ஒரு லெஜெண்ட் கிட்ட இருந்து பாராட்டு வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமிழ் மக்களிடம் இருந்து இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. இவ்வளவு வரவேற்பு கிடைப்பது நன்றாக இருக்கிறது” எனவும் இயக்குனர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தின் கதையம்சத்தை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘குணா’ படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் பாடல் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…