டூ லேட் படம் குறித்து இயக்குனர் பாரதிராஜா பாராட்டு….!!!
- 32 சர்வதேச விருதுகளை பெற்ற டூ லேட் திரைப்படம்.
- 50 வருட காலகட்டத்தில் இந்த படம் கொடுத்த சுமை, அழுத்தத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ‘டு லெட்’ படம் கடந்த வியாழனன்று வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளை பெற்ற பெருமையுடன் இந்தப்படம் திரைக்கு வந்துள்ளது.
இயக்குநர் பாரதிராஜா இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேதோ படங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த 50 வருட காலகட்டத்தில் இந்த படம் கொடுத்த சுமை, அழுத்தத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், நான் என்ன உணர்ந்தேனோ அதைத்தான் சொல்கிறேனே தவிர, இதில் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை” என மனம் நெகிழ்ந்து இந்தப்படத்தை பாராட்டியுள்ளார்.