Vijay : தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் 69-வது திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க மாட்டார். எனவே, அந்த படம் கண்டிப்பாக மறக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என ரசிகர்களும் விஜயும் ஆசைப்படுகின்றனர்.
எனவே, அவருடைய 69 திரைப்படத்தை பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் அந்த திரைப்படம் அரசியல் கதையம்சத்தை கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை ஆர்.ஆர். ஆர் திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான டி. வி. விஎன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கான புதிய தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது அது என்னவென்றால் விஜயின் சம்பளம் பற்றி தான். ஏற்கனவே, தமிழ் சினிமாவில் இப்போதே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படத்திற்கே விஜய் அதிகமாக சம்பளம் வாங்கி இருந்தார்.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது கோட் படத்தில் நடிப்பதற்காக 150 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்திற்காக விஜய் சம்பளமாக 250 கோடி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பார்த்த கோலிவுட்டே எம்மாடி ஒரு படத்திற்கு இத்தனை கோடியா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…