சிறகடிக்க ஆசை- விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் [13ஆம் தேதி] இன்றைக்கான எபிசோடை இந்த பதிவில் காணலாம்.
மீனா வீட்டுக்கு வந்ததும் வீட்டில் உள்ளவர்கள் விசாரிக்கிறார்கள். அப்போது மீனாவும் நான் சுடுதியிடம் சொல்லிவிட்டு தான் போனேன் என்று கூறுகிறார். அந்த நேரத்தில் சுருதியும் வீட்டுக்குள் வருகிறார். மீனா என்கிட்ட நீங்க எப்ப சொன்னீங்கன்னு கேக்குறாங்க.
உடனே மீனாவும் ஷாக் ஆயிடறாங்க. அப்புறம் காலையில நடந்ததை சொல்றாங்க. உடனே ஸ்ருதி சிரிச்சிடறாங்க. ஓ.. அப்போ மிஸ் கம்யூனிகேஷன் நடந்திருக்கு அப்படின்னு சொல்றாங்க .முத்துவுக்கு இது புரியாம கேக்குறாங்க .அதுக்கு ஸ்ருதி சொல்றாங்க நான் காலையில போன்ல பேசிட்டு இருந்தேன் அதை மீனா தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க அதுதான் நான் இங்கிலீஷ்ல சொன்னேன் அப்படின்னு சொல்றாங்க.
உடனே முத்துவும் நான் கார் ஓட்டும்போதும் இதே மாதிரி தான் சில பேரு காதுல மாட்டிகிட்டு பேசுவாங்க நான் என் கிட்ட தான் பேசுறாங்கன்னு நான் நானும் பேசுவேன். இந்த போன் வந்ததுனால நிறைய பிரச்சனை வந்துருச்சு அப்படின்ற மாதிரி முத்து சொல்றாங்க.
இப்போ மீனாவும் முத்துவும் மாடில உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க .நீங்க என் மேல ரொம்ப பாசமாய் இருக்கிறீங்க நான் புரிஞ்சுகிட்டேன் அப்படின்னு மீனா சொல்றாங்க. முத்துவும் சத்யா என் மேல கம்ப்ளைன்ட் பண்ணுனான்னு சொல்றாங்க.
மீனா உடனே அவன் ஏன் உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணினான். உன்ன காணோம்னு நான் தான் உன்னை ஏதோ பண்ணிட்டேன்னு கம்ப்ளைன்ட் பண்ணான்னு சொல்றாங்க. உடனே மீனா நாளைக்கு போய் நான் சத்யாவை பேசுக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க .
இப்போ முத்து அந்த பூவை எடு நான் வச்சு விடுறேன்னு சொல்றாங்க உடனே மீனாவும் சந்தோஷமா எடுத்து கொடுக்குறாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிக்கிட்டே ஊட்டிவிட்டு சாப்பிடுகிறார்கள்.
காலையில மீனா போய் சத்யா கிட்ட கோவமா பேசுறாங்க .நீ எதுக்கு அவர் மேல கம்ப்ளைன்ட் பண்ணின அப்படின்னு கேக்குறாங்க .உடனே சத்யாவும் உன்ன காணோம் அதனால தான் கம்ப்ளைன்ட் பண்ணினேன் அப்படின்னு சொல்றாங்க. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பண்ணாதன்னு திட்டுறாங்க .
சத்யா போய் சிட்டி கிட்ட இனிமேல் அக்கா மாமா விசயத்துல தலையிட வேணாம்னு சொல்றாரு. சிட்டியும் ஷாக் ஆகி அப்படியே பார்க்கிறாரு .அதோட இன்னைக்கான எபிசோடு முடிந்துவிட்டது.
நாளைக்கான ப்ரோமோவில் சுருதி கிச்சனுக்கு வராங்க மீனா சமையல் செஞ்சுட்டு இருக்காங்க. அப்போ மீனா கிட்ட சுருதி நீங்க ரெம்ப சாப்டான டைப்பா இருக்கிறீங்க ..நான் அப்படி இல்ல எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா நான் சும்மா விடமாட்டேன் உண்டு இல்லைனு பண்ணிடுவேன் அப்படின்னு சொல்றாங்க .
அப்போ மீனா சிரிச்சுக்கிட்டே அத்தை பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவீங்க ன்னு கேக்குறாங்க .அந்த டைம்ல விஜயாவும் கிச்சனுக்கு வெளியே நின்று ஒட்டு கேக்குறாங்க. அதற்கு ஸ்ருதி சொல்றாங்க ஒரு கரண்டிய நெருப்புல காட்டி எக்ஸ் மார்க் மாதிரி சூடு போட்டு விட்டுருவேன் அப்படின்னு சொல்றாங்க. இதைக் கேட்ட விஜயா ஷாக் ஆகி நிக்கிறாங்க.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு நாளைய பதிவில் காணலாம்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…