சிறகடிக்க ஆசை இன்று.. விஜயாவிற்காக முத்துவும் மீனாவும் செய்த காரியம்..!

sirakadikka asai (1)

சிறகடிக்க ஆசை– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 18] சுவாரசியமான நிகழ்வுகளை இங்கே காணலாம்.

கலை கட்டும் விஜயாவின் டான்ஸ் ஸ்கூல் ;

விஜயா வெற்றிகரமாக டான்ஸ் கிளாஸை ஆரம்பித்து விட்டார், இப்போ  ஸ்ருதியோட  அம்மா விஜயாவா புகழ்றாங்க …சம்மந்தி நீங்க கத்துக்கிட்டத மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க அதுவே பெரிய விஷயம் அப்படின்னு சொல்றாங்க.

விஜயா இதைக் கேட்டு உங்கள மாதிரி பெரிய இடத்து  ஆளுங்க வாழ்த்தினா  நான் நல்லா வந்துருவேன் சம்மந்தி அப்படின்னு சொல்றாங்க .இப்போ ஸ்ருதியோட அம்மா நீங்க டான்ஸ் ஆடி நான் பார்த்ததில்லை அப்படின்னு சொல்றாங்க ..உடனே விஜயாவும் குரு வணக்கத்தோடு டான்ஸ் ஆடி காட்றாங்க .இதை ரவியும் மனோஜூம்  வீடியோ எடுக்குறாங்க.

அதுக்கப்புறம் பார்வதி விஜயா ரெண்டு பேரும் சந்தோசமா பேசிட்டு இருக்காங்க. அப்போ விஜயா சொல்றாங்க 100 ஸ்டுடென்ட் சேர்ந்தா போதும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாஸ் எடுத்தா கூட போதும் அப்படின்னு பெருமையா பேசிகிட்டு இருக்காங்க. ஆனா அன்னைக்கு ஒரு ஸ்டூடண்ட் கூட வந்து சேரல.

ஒவ்வொரு முறையும் காலிங் பெல் அடிக்கும் போது விஜயா ஸ்டூடண்டா தான் இருக்கும் அப்படின்னு சந்தோசமா இருக்காங்க.. ஆனா கதவை திறந்து பார்த்தா பழைய துணி வாங்குபவர் , வாட்டர் போடுபவர் ,ep ல  இருந்தும் தான் வராங்க. இப்போ ep  ல இருந்து வராங்க விஜயா அவர்களை பார்த்துட்டு ஸ்டுடென்ட் அப்பாவா தான் இருக்கும்ன்னு டான்ஸ் கிளாஸ் பத்தி பேசுறாங்க .

உடனே அவரு நான் ஈபி ல இருந்து வரேன் இனிமே நீங்க மூணு மடங்கா கரண்ட் பில் கட்டணும்னு சொல்றாரு .இதைக் கேட்டு பார்வதியும் விஜயாவும் ஷாக் ஆகுறாங்க. இப்போ விஜயா வீட்ல சோகமா உக்காந்து இருக்காங்க .இத பாத்துட்டு அண்ணாமலை ஆறுதல் சொல்றாங்க.

விஜயாவிற்கு ஆறுதல் கூறும் அண்ணாமலை ;

விஜயா சாப்பாடு ,டீ எதுவுமே சாப்பிடாம கூட இருக்கிறாங்க. முத்துவும்  மீனா கிட்ட கேக்குறாங்க என்ன ஆச்சு அவங்களுக்கு அப்படின்னு ..ஒருத்தர் கூட கிளாசுக்கு வரலையாம்  அப்படின்னு மீனா  சொல்றாங்க எனக்கு கூட பூ அன்னிக்கு விக்கலைன்னா அந்த நாள் பூராமே நல்லாவே இருக்காது அப்படின்னு சொல்றாங்க..

இப்போ விஜயா டான்ஸ் ஸ்கூலுக்கு  போய் பார்வதி கூட பேசிட்டு இருக்காங்க இப்படியே போச்சுன்னா உனக்கு தான் பார்வதி நான் டான்ஸ் கிளாஸ் சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாங்க.. அதுக்கு பார்வதி சொல்றாங்க ஆமா இந்த வயசுல நான் காத்துகிட்டு எங்கே போய் அரங்கேற்றம் பண்றது அப்படின்னு நக்கலா கேக்குறாங்க.. இதோட இன்னைக்கு  எபிசோட் முடிந்தது .

 ஸ்டூடெண்ட் ஆகும் முத்து மீனா ;

நாளைக்கு  ப்ரோமோல விஜயாவும் பார்வதி பேசிட்டு இருக்கும்போது காலிங் பெல் சவுண்ட் கேக்குது கதவ திறந்து பார்த்தா முத்துவும் மீனாவும் குரு தட்சணையோடு நிக்கிறாங்க எங்களுக்கு டான்ஸ் கத்து குடுங்க அத்தை அப்படின்னு மீனா கேக்குறாங்க.

முதல்ல விஜயா கோபப்படுறாங்க அப்புறம் அவங்களும் டான்ஸ் சொல்லி கொடுக்குறாங்க.. அப்படி ஆடிட்டு இருக்கும்போது விஜயாவுக்கு ஒரு பக்கம் கழுத்து சுளிக்கிறது ,அதோட ப்ரோமவ  முடிச்சுட்டாங்க நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு நாளைய எபிசோடில் காணலாம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal
Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi
Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav
Gold Rate
MS Dhoni HOUSE