சிறகடிக்க ஆசை இன்று.. முத்து மீனாவிற்கும் அதிகரிக்கும் சந்தேகம்..

sirakadikka asai (2)

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூன் 22] கதை களம் எப்படி இருக்கும் என பார்ப்போம் .

வீடியோ காலில் மலேசியா மாமா ;

முத்துவும்  மீனாவும் மாடில பேசிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ பண்ணுது சீக்கிரமா இத கண்டுபிடிக்கணும் அப்படின்னு முத்து  சொல்றாங்க.. அதை ரோகிணி ஒட்டு கேட்டுட்டு நின்னுட்டு இருக்காங்க. இப்போ மீனா எல்லாருக்கும் காபி குடுக்குறாங்க. அந்த டைம்ல ரோகினி போன் பேசிட்டு நடக்குறாங்க.

அத விஜயா பார்த்து யாருமா போன்லன்னு கேக்குறாங்க.. ஆன்ட்டி என்னோட மாமா தான் துபாயில் இருந்து கால் பண்ணி இருக்காரு அப்படின்னு சொல்லவும் எல்லாருமே அவர்கிட்ட வீடியோ கால்ல பேசுறாங்க அந்த டைம்ல முத்துவும் வந்துட்டாரு அவரும் பார்த்துட்டு போன வாங்கி அவர்கிட்ட நக்கலா பேசுறாரு.

அதிகரிக்கும் முத்துவின் சந்தேகம் ;

அப்போ துபாய்ல நீங்க எங்க இருக்கீங்க அப்படின்னு அட்ரஸ் கேக்குறாரு அதுக்குள்ள ரோகினி போன வாங்கி சமாளிச்சு விடுறாங்க. இப்போ முத்து ரூமுக்கு போய்டராரு போய் யோசிக்கிறாரு மீனாவும் அங்க வந்துறாங்க ஏதோ இடிக்குது இந்த பார்லர் அம்மா வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து எனக்கு ஒரு டவுட் இருக்குது.

நீ நேத்து தானே பார்லர் அம்மா கிட்ட அவங்க மாமாவ பார்த்ததாக சொன்ன அது எப்படி அடுத்த நாளே போன் பண்ணுவாரு.. ஆமாங்க நான் கூட நேத்து அவ்வராக்கும் நினைச்சேன் ஆனா அவர் இல்ல அவர பாருங்க துபாயில் இருந்து கால் பண்ணி இருக்காரு அப்படின்னு மீனா சொல்றாங்க.

அதுக்கு முத்து இல்ல மீனா நீ அவர தான் பார்த்து இருக்க.. அவரு துபாய்ல தான் இருந்து பேசுறாருன்னு உனக்கு எப்படி தெரியும் நீ போய் பார்த்தியான்னு கேக்குறாங்க.. ஏதோ பிராடு வேலை பண்ற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றாரு முத்து. இப்போ வித்யா கிட்டயும் ரோகினி கிட்டையும் அந்த கறிக்கடை மணி வந்து எப்படி மா நீங்க சொன்ன மாதிரியே கரெக்டா பேசிட்டனா.

ரோகினி சொல்றாங்க இல்ல நீங்க சொன்னதை விட நீங்களா ஏதோ பேசிட்டீங்க அப்படின்னு சொல்றாங்க.. நீங்க சொன்னதெல்லாம் என் மண்டையில நிக்கலாமா அப்படின்னு மணி சொல்றாரு. கரெக்டா  அந்த துபாய் மாதிரி செட்டப் எல்லாம் பண்ணிட்டீங்க .உடனே வித்யா சொல்லுறாங்க நல்ல வேலை எனக்கு ஸ்டூடியோல்ல ஃப்ரெண்ட் இருந்ததினால் செட் அப் பண்ணி பேச வச்சாச்சு.

ரோகிணிக்கு கறிக்கடை மணியின் அட்வைஸ் ;

இப்போ  வீட்ல எல்லாருமே நம்பிட்டாங்களா அப்படின்னு கேக்குறாங்க. ரோகினியும் ஆமான்னு சொல்லுறாங்க . ஆனா மணி ரோகினிக்கு அட்வைஸ் பண்றாரு இது ரொம்ப நாளைக்கு நீடிக்காதுமா பாத்துக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. வித்யாவும் சொல்றாங்க எனக்கு என்னமோ நீ மாட்ற நேரம்  நெருங்கிடுச்சுனு   தோணுது.

ரோகினி சொல்றாங்க மனோஜ் இது தெரிஞ்சா கோபப்படுவாரு. அதுக்கு வித்தியா சொல்றாங்க ஏன் டிவோர்ஸ் கூட பண்ணிருவாரு .ரோகினி சொல்றாங்க அப்படி நடக்க விடமாட்டேன் இது எனக்காக அமைச்சுகிட்ட வாழ்க்கை இதை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் .மனோஜுக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்துட்டா எல்லாமே சரியாயிடும்னு சொல்லுறாங்க .

ரவி தன் காதலை ப்ரூவ் பண்ணிருவாரா ?

இப்போ ரவி வீட்டுக்குள்ள வராங்க அது தெரியாம ஸ்ருதி செல்ல பார்த்துட்டே சிரிச்சிட்டு அவர இடிச்சிடுறாங்க. ஏய் சுருதி அப்படியே மொபைல் குள்ள இறங்கிடு அப்படின்னு சொல்றாரு. சுருதி சொல்றாங்க இங்க பாருப்பா ஒருத்தர  வைபை மூன்று கிலோமீட்டர் வரைக்கும் தூக்கிட்டு நடந்து போயிருக்கிறார் என்று சொல்கிறார். அத கேட்டுட்டு ரவி சொல்றாங்க அது சரி அதுக்கு இப்ப என்னன்னு கேக்குறாங்க.

நீயும் இதே போல என்னை தூக்கிட்டு போ உன்னோட லவ்வ ப்ரூவ் பண்ணி எனக்கு அப்படின்னு சொல்றாங்க.. ரவியும்  தூக்கிட்டு வீட்டுக்குள்ளேயே சுத்துறாங்க . இப்போ மீனாவும் முத்துவும் வந்துடறாங்க. முத்து கேட்கிறார் ஏன் என்ன ஆச்சு பல குரலுக்கு ஏதாவது காலில அடிபட்டுருச்சானு கேக்குறாரு. அதுக்கு அவங்க சொல்றாங்க இல்ல அவங்க லவ்வ ப்ரு  பண்றாங்கன்னு சொல்றாங்க .

உடனே முத்துவும்  மீனாவ தூக்கிட்டு சுத்துறாங்க இப்ப மனோஜ் ரோகினி வந்துடறாங்க .ரோகிணி என்னாச்சுன்னு கேக்குறாங்க.. அதுக்கு சுருதி  சொல்றாங்க இவங்களோட லவ்வ ப்ரூவ் பண்றாங்க அப்படிங்கிறாங்க .உடனே ரோகிணி மனோஜ பாக்குறாங்க.. மனோஜ் சொல்றாரு புரியுது இதே மாதிரி நானும் தூக்கணும் அதானே அப்படின்னு கேக்குறாரு.

இப்படியே மூணு பேரும் அவங்கவங்க வைப  தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க இப்போ அண்ணாமலையும் விஜயாவும் வந்துடறாங்க ரெண்டு பேரும் அவங்கள பாத்துட்டு வாசல்லயே நிக்கிறாங்க இதோட இன்னைக்கான எபிசோட் முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi