Categories: சினிமா

சிறகடிக்க ஆசை இன்று.. விஜயாவின் வன்மத்தால்.. அண்ணாமலையின் திட்டம் நிறைவேறுமா?

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்.

மீனாவை மட்டமாக பேசும் ரோகிணி ;

மீனாவும் ஸ்ருதியும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது சுருதி சொல்கிறார் ..மீனா உங்களுக்கு டயர்டே ஆகாதா மூணு வேலையுமே நீங்க தான்  சமைக்கிறீங்க.. அதுக்கு மீனா சொல்றாங்க ..மத்தவங்களுக்காக செய்யும்போது அலுப்பு தெரியாது சுருதி. இப்போ ரோகிணி இங்க வராங்க. நீங்க எப்படி மீனா மாசம் மாசம் பணம் கொடுப்பீங்க முத்து டிரைவர் வேலை பாக்குறாரு அப்படின்னு கிண்டலா கேக்குறாங்க.

இதுக்கு மீனா சொல்றாங்க உழைக்க முடியும்னு  நம்பிக்கை இருந்தாலே போதும் நாங்க கொடுத்துடுவோம். அதுவும் நீங்க லட்சத்துல சம்பாதிக்கிறீங்க எங்கள விட கம்மியா தானே சொல்லி இருக்கீங்க அப்படின்னு சொல்றாங்க. இதுல ரோகினிக்கும் மீனாவுக்கும் கொஞ்சம் வாக்குவாதம் வருது உடனே சுருதி அதை சமாதானப்படுத்தி விடுறாங்க.

இப்போ முத்துவும்  மாடியில் இருந்து வராரு மீனா ஒரு டீ குடு தலை வலிக்குதுன்னு சொல்றாரு. மாடியில் நடந்ததெல்லாம் மீனா கிட்ட சொல்றாங்க .இப்போ மீனாவும் கிச்சன்ல நடந்த எல்லாத்தையும் சொல்றாங்க .இப்போ அண்ணாமலைய தேடி அவங்க பிரண்டு இன்ஜினியரை கூப்பிட்டு வராங்க.. உடனே விஜயா, எல்லாரையும் கூப்பிட்டு உங்க அப்பா இன்ஜினியரை கூப்பிட்டு மாடிக்கு போறாரு வாங்க எல்லாரும் போவோம்னு அங்க போறாங்க.

மாடியில் ரூம் கட்டும் எண்ணத்தில் அண்ணாமலை ;

இன்ஜினியரு பாத்துட்டு ரூம் கட்ட 5 லட்சம்   பணம் செலவாகும் என்று சொல்கிறார் .அண்ணாமலையும் நான் ரெடி பண்ணிட்டு சொல்றேன் அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறாரு . இப்போ விஜயா சொல்றாங்க யாருக்கு ரூம் கட்ட போறீங்க. அண்ணாமலை சொல்றாரு முத்துவும் மீனாவும் எத்தனை நாளு ஹால்லே  படுப்பாங்க அவங்களுக்கு தான் ரூம் அப்படின்னு சொல்றாரு .

உடனே விஜயா  இவங்களுக்கு  எதுக்கு அஞ்சு லட்சத்தில் ரூம் ஒரு கூர வீடு இருந்தா பத்தாதா அப்படின்னு கேக்குறாங்க. இப்ப மீனா சொல்றாங்க என் புருஷன் கூட நான் கூர  வீட்ல இருந்தாலும் சந்தோசமா தான் இருப்பேன் அப்படின்னு சொல்லிருறாங்க. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு அப்படி கூற விடா இருந்தா நம்ம ரெண்டு பேரும் தான் போகணும்.

உடனே விஜயா இது என் அப்பா எனக்காக கொடுத்த வீடு நான் எதுக்கு குடிசையில இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாமல் மீனாவோட அப்பாவை பத்தி எல்லாம் பேசுறாங்க. இதுக்கு மீனா கோவமா  என் அப்பா உழைச்சு வாழ்ந்தவரு யாரு பணத்தையும் எடுத்துட்டு ஓடல அப்படின்னு சொல்றாங்க.

உடனே மனோஜ்க்கு கோவம் வருது ஏய் நீ யார சொல்ற அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு முத்து .. யாருக்கு குத்துதோ அவங்கள தான் அப்படின்னு சொல்லிடுறாரு. இதுல ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் வருது அண்ணாமலை சொல்றாரர் முத்து உனக்கு வேலைக்கு நேரமா இருக்கும் நீ கிளம்புனு .

ஸ்ருதியின் அம்மாவால் வீட்டில் நடக்கும் கலவரம் ;

சுருதியும் ரவி கிட்ட போயி இந்த வீட்ல யாருக்குமே ஜாலியா லைஃபை வாழ தெரியல. எப்ப பாத்தாலும் ஆன்ட்டி மீனாவை திட்டிட்டே இருக்காங்க சீரியல்ல தான் இந்த மாதிரி பார்த்திருக்கேன் அப்படின்னு ரவி கிட்ட புலம்பிட்டு  இருக்காங்க. இப்போ ஸ்ருதியோட அம்மா ஸ்ருதி அப்பாகிட்ட அஞ்சு லட்சம் குடுங்க அப்படின்னு கேக்குறாங்க .

ஸ்ருதி கால் பண்ணி வீட்ல நடந்ததெல்லாம் சொல்லி இருக்காங்க அதனால அவங்களும் அதை பயன்படுத்திக்கிட்டு எப்படியாவது சண்டை வர வச்சு ஸ்ருதிய தனி குடுத்தனம்  கூப்பிட்டு வந்தரனும்னு அவங்க அப்பா கிட்ட பேசுறாங்க. உடனே அவரும் செக் கொடுத்து அனுப்பி விடுறாரு .சுருதி  அம்மா வீட்டுக்கு வர்ராங்க .

எல்லாரும் வரவேற்கிறாங்க. அதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது .நாளைக்கான ப்ரோமோல மனோஜுக்கும் முத்துக்கும் பெரிய சண்டை நடக்குது நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு நாளைய  கதைக்களத்தில் பார்ப்போம்.

Recent Posts

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

4 minutes ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

31 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி! பிரதமர் மோடி இரங்கல்!

திருப்பதி :  ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…

55 minutes ago

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

10 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

11 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

12 hours ago