Categories: சினிமா

சிறகடிக்க ஆசை இன்று.. அண்ணாமலையின் திட்டம் நிறைவேறுமா?

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை சீரியல்- விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான கதைக்களத்தை இங்கே காணலாம்.

அண்ணாமலை மகிழ்ச்சி அடைந்தார் ;

ரவி ஸ்ருதியை  தூக்கி சுத்துறாரு ..இதை பார்த்த மீனாவும் முத்துவும்  என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க ..அதுக்கு ரவி சொல்றாரு எவனோ ஒருத்தன் எங்கேயோ வீடியோ எடுத்து போட்டது நமக்கு டேஞ்சர் ஆயிடுச்சு அப்படின்னு சிரிச்சுகிட்டே சுத்துறாரு..

இப்ப முத்து  சொல்றாரு அப்போ இதுக்கு பேரு தான் காதல் பரீட்சை போல. இப்போ மீனா சொல்றாங்க அவராவது இதையாவது பண்றாரே.. ஏன் நான் கூட உன்னை கோவில்ல தூக்கிட்டு நடந்தன அப்படின்னு முத்து சொல்றாரு.. அது வேண்டுதலுக்காக செஞ்சீங்க அப்படின்னு மீனா சொல்றாங்க.

இப்போ முத்துவும்  மீனாவ தூக்கி சுத்துறாரு இந்த டைம்ல மனோஜ் ரோகினி வராங்க.. அவங்களும் கேக்குறாங்க என்ன ஆச்சுன்னு முத்து  சொல்றாரு காதல் பரீட்சை எழுதுரோம்னு  சொல்றாரு. இப்ப ரோகினி மனோஜ பார்க்கிறாங்க மனோஜும் என்ன உன்னை  தூக்கி சுத்தனும் அதானே கேட்டுட்டு தூக்குறாரு ஆனா தூக்க முடியல..

வேலை பார்த்தா டயட் ரோகிணி இப்ப பாரு அப்படின்னு சொல்லிட்டு இப்ப முயற்சி பண்ணி தூக்கிறாரு .இப்போ அண்ணாமலையும் விஜயாவும் வந்துறாங்க விஜய் கேக்குறாங்க என்னடா இது இப்படி பொண்டாட்டிய தூக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்க அப்படி கேக்குறாங்க. அதுக்கு முத்து சொல்றாரு பொண்டாட்டிய தானே தூக்கிட்டு சுத்த முடியும் பின்ன ரோட்டில் போறவங்களையா தூக்குறது அப்படின்னு கேக்குறாரு.

மனோஜுக்கும் ரவிக்கும் ஏற்படும் வாக்குவாதம் ;

இப்போ சுருதி   சொல்றாங்க அவங்களே ஏன்  கேக்குறீங்க நான் தான் ரவி கிட்ட என்ன தூக்க சொன்னேன் அத பாத்துட்டு அவங்களும் சும்மா ஜாலியா பண்ணுனாங்க  அப்படின்னு சொல்றாங்க. இப்போ அண்ணாமலை சொல்றாரு விடு விஜயா சின்ன பசங்க தானே அப்படின்னு. விஜயா சொல்றாங்க அதுக்கு தான் அவங்க அவங்களுக்கு ரூம் இருக்கு இல்ல அங்க போயி எதா இருந்தாலும் பண்ண வேண்டியதுதானேனு  சொல்றாங்க.

இப்ப முத்து சொல்றாரு எங்களுக்கு தான் ரூமே  இல்லையே அப்படின்னு .இப்போ ரூம் பிரச்சனை ஆரம்பிச்சிடுது, அதுல மனோஜ்க்கும் ரவிக்கும் வாக்குவாதம்  வருது. முத்துவையும் ரவியையும் மனோஜ் மட்டம் தட்டி பேசுறாரு. உடனே அண்ணாமலை மீனா நீ ஒரு நோட்டை எடுத்துட்டு வான்னு சொல்றாரு. இப்போ மனோஜ் கிட்டயும் ரோகிணி கிட்டையும் மாசம் நீங்க எவ்வளவு தருவீங்கன்னு கேக்குறாரு.

அண்ணாமலை போடும்  திட்டம் ;

என்ன  ஆச்சு அங்கிள் நாங்க  மாசம் மாசம்  குடுக்குறோமே அப்படின்னு ரோகினி சொல்றாங்க. அது போக உங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு கேக்குறாங்க. ரோகினி 8000 ன்னு சொல்றாங்க. மனோஜ் ஏன்பா திடீர்னு கேக்குறீங்கன்னு சொல்றாரு. முத்து இருந்துட்டு நீ படிக்கல எவ்வளவு காசு கேட்டு இருப்ப இப்ப என்ன கேள்வி கேட்கிறனு  கேக்குறாரு.

இப்போ முத்து கிட்டயும்  அண்ணாமலை எவ்வளவு கொடுப்பீங்க ன்னு கேக்குறாரு .அதுக்கு மீனா சொல்றாங்க பத்தாயிரம் ரூபா. ரவியும் பத்தாயிரம் ரூபாய் தரேன்னு சொல்லிடுறாரு. இப்போ மீனா இருந்துட்டு மாமா நானும் வேலைக்கு போறேன் அதனால நான் 2000 ரூபாய் கொடுக்கிறேன் சொல்றாங்க. ரோகிணி 5000 ரூபாய் தரேன்னு சொல்றாங்க ஸ்ருதி பத்தாயிரம் ரூபாய் தரேன்னு சொல்லிடறாங்க.

இப்போ அண்ணாமலை சரி நீங்க மாசம் 5ம்  தேதி ஆனா குடுத்துறணும்  அப்படின்னு சொல்றாரு. விஜயா சொல்லுறாங்க  அப்ப என்கிட்டே கொடுத்திருங்க அப்படிங்கிறாங்க. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு இல்ல நீங்க என்கிட்ட தான் கொடுக்கணும்னு சொல்லிடுறாரு. இப்ப மனோஜ் மறுபடியும் கேக்குறாரு இது எதுக்குப்பானு கேக்குறாரு. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு நேரம் வரும்போது நானே சொல்லுவேன்.

ரவியின் பிளாட் வாங்கும் கனவு ;

இப்போ முத்து, ரவி ,மனோஜ் மூணு பேரும் மாடில பேசிட்டு இருக்காங்க. மனோஜ் எதுக்கு அப்பா பணம் கேட்டார்னு  எனக்கு தெரியலையே ஒருவேளை நம்ம மூணு பேருக்கும்  ரூம பிரித்து கொடுத்துட்டு அவங்க தனியா போகப் போறாங்களோ அப்படின்னு ரவி கிட்ட சொல்றாரு .முத்து சொல்றாரு நான் அப்படியெல்லாம் அப்பாவை விட மாட்டேன் உனக்கு ஏண்டா புத்தி இப்படி போகுது அப்படின்னு திட்டுகிறார்.

இப்போ ரவி சொல்றாரு பேசாம நம்ம பிளாட் வாங்கிடலாமா அப்படின்னு கேக்குறாரு அதுக்கு மனோஜ் வேகமா  எனக்கு கிரவுண்ட் ப்ளோர்தான் சொல்லுறாரு  . உடனே முத்து சொல்றாரு ஆமா அப்படியே கீழ ஒரு குழி தோண்டி அண்டர் கிரவுண்டுக்கே போய் படுத்துக்கோ அப்படின்னு நக்கலா சொல்றாரு. ஏண்டா உங்க புத்தி  எல்லாம் தனியா போறது பத்தியே யோசிக்குது.

அதுக்கு மனோஜ் சொல்றாரு உனக்கு என்னப்பா நீ சாதாரண டிரைவர் தானே நான் வந்து இப்ப பிசினஸ்மேன் அது மட்டும் இல்லாம மீனா ஓட குடும்பத்தை பத்தி கீழ்த்தனமா பேசுறாரு. இதுக்கு உடனே முத்துக்கு கோவமா  மீனா ஓட குடும்பத்தை பத்தி பேசாத அப்படின்னு அடிக்க போறாரு .

இப்போ ரவி சொல்றாரு கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கலாமேனு  மாடிக்கு வந்தா இங்க வந்து சண்டை போடுறீங்க அதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது. நாளைக்கு ஆனா ப்ரோமோல அண்ணாமலை வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் மாடில முத்துவுக்கும் மீனாவுக்கு  ரூம் கட்ட போறத பத்தி சொல்றாங்க .

அதுக்கு விஜயா சொல்றாங்க அவங்களுக்கு ஒரு கூரை    வீடு  போதும் அப்படின்னு சொல்றாங்க .உடனே அண்ணாமலை அதுக்கு சொல்றாரு கூரையா இருந்தா நாம தான் போய் படுத்துக்கணும் அப்படின்னு சொல்றாரு.. நாளைக்கு என்ன நடக்குதுன்னு நாளைக்கு  எபிசோடில் பார்ப்போம்.

Recent Posts

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

17 minutes ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

28 minutes ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

1 hour ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

1 hour ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

2 hours ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

3 hours ago