இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.கரண் ஜோகர் தயாரித்திருந்த இந்த படத்தை சஷாங் கைத்தான் இயக்கியிருந்தார்.இப்படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலானது.
இதனையடுத்து ஜான்வி கபூர் ‘டக்த்’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.கரன் ஜோஹர் இயக்கவுள்ள இதில் ரன்வீர் சிங்,கரீனா கபூர்,விக்கி கௌஷல்,பூமி பெட்நேகர்,அனில் கபூர் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படதில் ஜான்வி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை ஜான்வி தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தமிழ்பட இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாகவும்,அதற்கு ஜான்வி தரப்பில் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பமுள்ளது.
ஜான்வி வட இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருவாகும் வரை மற்ற மொழி படங்களில் நடிக்க மாட்டார் என ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…