அந்த பாட்டு விஜய்யை தாக்கி தான் எழுதப்பட்டது! உண்மையை உடைத்த அஜித் பட இசையமைப்பாளர்!
Vijay : உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்ட பாடல் என இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் -அஜித் என்றாலே போட்டி என்பது அனைவர்க்கும் தெரியும். எனவே, ஆரம்ப காலத்தில் எல்லாம் இவர்களுடைய படங்களில் இடம்பரும் வசனங்கள் மாற்றி மாற்றி தாக்கி பேசுவது போலவும் அமைந்து இருக்கும். குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தில் இடம்பெற்று இருந்த உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்டது போல் இருக்கும்.
பல அஜித் ரசிகர்கள் இந்த பாடல் விஜய்யை தாக்கி தான் எழுதப்பட்டது என்றும் கூறி இருக்கிறார்கள். இது உண்மை என அந்த பாடலை இசையமைத்த பிரபல இசையமைப்பாளரான பரத்வாஜ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய பரத்வாஜ் ” அட்டகாசத்தில் இருந்து உனக்கென்ன பாடல் தளபதி விஜய்யை தாக்கும் வகையில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது.
அந்த சமயம் விஜய் – அஜித் இருவருக்கும் போட்டி இருந்தது. அதைப்போல அந்த சமயம் இந்த பாடல்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை ஏனென்றால், அந்த சமயம் சமூக வலைத்தளங்கள் அந்த அளவுக்கு ஆக்டிவாக இல்லை. இந்த மாதிரி சமயத்தில் எல்லாம் அந்த பாடல் வந்து இருந்தால் அவ்வளவு தான் திரையரங்கை கிழித்திருப்பார்கள்.
அந்த பாடலை இசையமைக்க ஒப்புக்கொண்டபோது நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. எனவே இசையமைத்து கொடுத்தேன்.ஆனால், பாடல்களில் வரும் வரிகள் எல்லாம் விஜய்யை தாக்கி தான் எழுதப்பட்டு இருக்கும். எல்லா வரிகளையும் வைரமுத்து தான் எழுதினார். பாடல் தற்செயலாக எல்லாம் எழுதவில்லை வேணும் என்றே தான் எழுதப்பட்டது” என பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் அந்த பாட்டு உண்மையை தானே சொன்னாங்க என கூறி வருகிறார்கள். மேலும், விஜய் ரசிகர்கள் மதுரை திரைப்படத்தில் தொடக்க பாடல் விஜய் இந்த நபரை அடிப்பார். ரெட் அஜித் பட கெட்அப் போல இருப்பார். இதற்கு பதில் அட்டகாசத்தில் ஒரு பாடலை வைத்துள்ளார் அஜித்.