நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ச்சியாக பல பெரிய பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆக ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு முன்பே தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?
அதைப்போல விக்ரம் நடிக்கும் அவருடைய 62-வது திரைப்படத்திலும் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா தான் நடிக்கவுள்ளார். அடுத்தாக கவினுக்கு வில்லனாக அவருடைய 6-வது திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
அதைப்போல, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LIC திரைப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்கிறார்.அடுத்ததாக சரிபோதா சனிவாரம் திரைப்படத்திலும் நானிக்கு வில்லனாக அவர் எஸ்.ஜே. சூர்யா தான் நடிக்கிறார். தொடர்ச்சியாக இவர் பெரிய படங்களில் நடித்து வருவதால் கண்டிப்பாக இன்னுமே பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…