சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் நடித்து வரும் கோட் படம் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான விற்பனை வியாபாரங்களும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கோட் படத்தின் திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும்போது 150 கோடி வேண்டும் என கேட்டார்களாம். அதற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் கொடுக்கவே முடியாது ரொம்பவே அதிகமான தொகையை கேட்கிறீர்கள் என்பது போல கூறினார்களாம்.
இதனால் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வேறு எந்த ஓடிடி நிறுவனமாவது வாங்கிக்கிறதா என பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியாதாம். ஆனால், எந்த நிறுவனமும் கோட் படத்தை வாங்க முன்வரவில்லையாம். இறுதியாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அப்போது தான் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் முடியாது 125 கோடி என்றால் ஓகே படத்தை வாங்கி கொள்கிறோம் என்று கூறியதாம். எனவே, படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…