பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா” இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது.
ஆனால், இன்று “ஆலம்பனா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்து இருந்தது. எனவே, KJR ஸ்டுடியோஸின் இந்த இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைலண்டாக கதையை முடித்த சம்பவம்…50வது படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்.!
இதனையடுத்து, KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் “ஆலம்பனா” படம் ஒத்திவைப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “கௌஸ்துப் என்டேர்டைன்மெண்ட் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆலம்பனா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவித்த தேதியில் திரைப்படத்தை வெளியிட அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த போதிலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் எங்களின் பலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் மீது வழக்கு போட்டுள்ள காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட இருக்கிறது. எனவே, இதே போலவே அயலான் படமும் இந்த விவகாரத்தில் இருப்பதால் அயலான் படமும் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. KJR ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் கீழ் ரசிகர்கள் பலரும் அயலான் படத்திற்கு இப்படியான அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்துறாதீங்க என கூறி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…