ஆலம்பனா படத்தை ஒத்திவைத்த நிறுவனம்! அப்போ அயலான் கதி?

ayalaan

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா”  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது.

ஆனால், இன்று “ஆலம்பனா”  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்து இருந்தது. எனவே, KJR ஸ்டுடியோஸின் இந்த இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைலண்டாக கதையை முடித்த சம்பவம்…50வது படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்.! 

இதனையடுத்து, KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் “ஆலம்பனா”  படம் ஒத்திவைப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “கௌஸ்துப் என்டேர்டைன்மெண்ட் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆலம்பனா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிவித்த தேதியில் திரைப்படத்தை வெளியிட அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த போதிலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் எங்களின் பலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் மீது வழக்கு போட்டுள்ள காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட இருக்கிறது. எனவே, இதே போலவே அயலான் படமும் இந்த விவகாரத்தில் இருப்பதால் அயலான் படமும் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  KJR ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் கீழ் ரசிகர்கள் பலரும் அயலான் படத்திற்கு இப்படியான அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்துறாதீங்க என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்