இணையும் அட்டகாசமான மிரட்டல் கூட்டணி.!

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம். ஆர்யா இந்த படத்தின் கதையை கேட்க அவருக்கும் பிடித்துவிட்டதாம்.
இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஆர்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. இதனால் முத்தையா படத்தில் நடிக்க அதிகமாக சம்பளம் கேட்டுள்ளாராம் ஆர்யா.
ஆர்யா கேட்ட சம்பளத்தை கமல்ஹாசன் கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
ஆர்யா தற்போது டெடி திரைப்படத்தின் இயக்குனரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025