காதலிக்க நேரமில்லை : இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். தி.ஜா. பானு, யோகி பாபு, லால், வினய் ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே, ரொமாண்டிக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து, படத்திற்கான சின்ன கிலிம்ப்ஸ் (Kadhalikka Neramillai) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். வீடியோவில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யாமேனன் இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு இருப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வரும் இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டி-சீரிஸ் தமிழ் வாங்கியுள்ளதாகவும், கிலிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் இசை படத்தின் மீதும், படத்தில் இடம்பெறும் பாடல்கள் மீதும் இருக்கும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…