Rajinikanth : தீராத பகையின் உச்ச கட்டம்! ரஜினி -சத்யராஜ் சண்டைக்கு காரணம் என்ன தெரியுமா?

rajinikanth and sathyaraj

நடிகர் ரஜினிகாந்தும் சத்யராஜும் தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், மிஸ்டர் பரத், மனத்தில் உறுதி வேண்டும், நான் சிகப்பு மனிதன், பாயும் புலி 1983, நான் மகான் அல்ல 1984 உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். இருப்பினும், இவர்கள் இருவருக்கும் மிஸ்டர் பரத் படத்தின் போது சில மனகசப்புகள் ஏற்பட்டதாக அந்த சமயமே செய்திகளும் பல பிரபலங்களும் கூட தெரிவித்தனர்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைக்கு காரணம் என்னவென்றால்,  மிஸ்டர் பரத் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு படத்தின் கதையை இயக்குனர் சத்யராஜிடம் கூறினாராம். முதலில் ரஜினியுடைய வயதுக்கு நான் அவருக்கு வில்லனாக நடித்தால் எப்படி செட் ஆகும்? என கேட்டாராம். பிறகு படத்தின் இயக்குனர் நீங்கள் இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிங்கள் கண்டிப்பாக செட் ஆகும் என கூறினாராம்.

பிறகு நடிகர் சத்யராஜும் படத்தில் நடித்துக்கொடுத்தாராம். படம் முழுவதும் எடுக்கப்பட்டு பார்த்தபோது சத்யராஜ் வரும் காட்சிகள் அதிகமாக இருந்த காரணத்தால் அவருடைய காட்சிகளில் சிலவற்றை படக்குழு நீக்க முடிவு செய்து நீக்கி விட்டதாம். இந்த தகவலை சத்யராஜிடம் தெரிவிக்க அவர் முதலில் நீங்க தான் நடிக்க சொன்னீங்க இப்போது என்னுடைய சில காட்சிகளை நீக்குகிறோம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டாராம்.

அதற்கு படக்குழு ரஜினி நடித்த காட்சிகளை நீக்க முடியாது சார் உங்களுடைய காட்சி அதிகமாக இருந்தது அதனால் தான் நீக்கி இருக்கிறோம் என கூறினார்களாம். பிறகு சத்யராஜ் தன்னுடைய காட்சிகள் அதிகமாக இருப்பதால் தானே சில காட்சிகளை மட்டும் தானே நீக்கி இருப்பார்கள் என்று நினைத்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்தாராம்.

படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய காட்சிகள் பெரிதாக இல்லை என்று மிகவும் அதிர்ச்சியாகி வருத்தப்பட்டாராம். பிறகு சத்யராஜுடன் இருந்தவர்கள் இதற்கு காரணம் ரஜினி சார் தான் என கிளப்பி விட்டுவிட்டார்களாம். அன்றிலிருந்து ரஜினியின் மீது சத்யராஜிற்கு கோபம் வர தொடங்கியாதாம்.  பிறகு ஒரு உண்ணாவிரதம் போராட்டத்திலும் ரஜினியை பற்றி சத்யராஜ் கடுமையாக விமர்சித்து பேசினாராம்.

அதிலிருந்து ரஜினிக்கும் சத்யராஜுக்கும் இடையே பேச்சுவார்தையே நடைபெறவில்லை எனவும் பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூட சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில்  சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி தான் என சத்யராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்