அதே பிரம்மிப்பு .. அதே மிரட்டல்… கொலை நடுங்க வைத்த டிமான்டி காலனி-2 ட்ரைலர்.!
டிமான்டி காலனி 2 : அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் அதில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்பொழுது ட்ரைலரும் வெளியாகி சும்மா மிரட்டியுள்ளது, முதல் பாகத்தில் எப்படி திரில்லராக அமைந்திருந்ததோ அதே போல், இதிலும் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக அமைந்திருக்கிறது.
இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.
ஞானமுத்து பட்டரை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்தவர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.