Bhagyaraj [file image]
Bhagyaraj தமிழ் சினிமாவில் கமர்ஷியலான காமெடி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாக்யராஜ் . இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் 80,90 காலகட்டத்தில் கலக்கினார் என்றே கூறலாம். அந்த சமயம் எல்லாம் இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிவதே சாதாரணமான விஷயம் இல்லயாம். ஏனென்றால், தன்னுடைய உதவி இயக்குனரையே தேர்வு வைத்து தான் பாக்கியராஜ் தேர்வு செய்வாராம்.
அப்படி ஒரு நடிகர் இயக்குநராகவேண்டும் என்ற கனவோடு பாக்கியராஜ் பின்னாடியே சுத்திகொண்டு இருக்கிறார். அவருக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் பாக்கியராஜ் வாய்ப்பே கொடுத்தாராம் . அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ராசுக்குட்டி படத்தில் ஜெகன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான செம்புலி ஜெகன் தான்.
இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேர முயற்சித்த தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாக்கியராஜ் சார் கிட்ட உதவி இயக்குனராக சேர்வது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை. அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவது ரொம்பவே கஷ்டம்.
3 வருடங்கள் நம்ம பின்னாடியே சினிமா வாய்ப்புக்காக சுத்துகிறான் சினிமா மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது கண்டிப்பாக கடினமாக உழைப்பான் என்று யோசித்து தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். மற்றவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களை தேர்வு வைத்து தான் எடுப்பார். ஆனால், நான் அதிகமாக ஆர்வம் கொண்டு 3 வருடங்கள் வாய்ப்புக்காக நின்றதால் எனக்கு தேர்வு எல்லாம் அவர் வைக்கவில்லை என நடிகர் செம்புலி ஜெகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…