கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலி நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவர் கடன் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து மக்கள் மத்தியில் பிரபலனார்.
இவர் தமிழ் சினிமாவில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ‘லிப்ட்’ என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.