நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.அதன்படி , இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 75 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் சம்பளமாக 30 கோடி வாங்கி இருக்கிறாராம்.
அதைப்போல, படத்தை இயக்கம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்காக 20 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அதைப்போல படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் அனிருத் 7 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ என கலாய்த்து வருகிறார்கள். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…