கொரோனா வைரஸ் நோயானது முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்த நோய் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை காட்டுபடுத்துவாதற்காக இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபாலங்கள் மற்றும் மக்கள் பாலரும் உதவி செய்து வருகிற நிலையில், திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் – ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட உபநிசாந்த், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், முதல்பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்ற பரிசுத்தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்து சிறுவன் உபநிசாந்த் கொடுத்திருக்கிறான். இதுகுறித்து சிறுவனின் தந்தை ரவிக்குமார் அவர்கள் கூறுகையில், ‘எனது பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான்.
நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன். அப்படி அவரைப் பார்க்கப் போகணும்னா காசு வேணும்னு சொல்லி, நீச்சல் போட்டியில கிடைச்ச பரிசுப் பணத்தை பத்திரமா சேர்த்து வச்சிருந்தான். அந்தப் பணத்தை முதலமைச்சர் நிதி உதவிக்காக எடுத்துக்கொடுத்தான்’ என்று கூறியுள்ளார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…