இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார்.
இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இளையராஜா மகள் மறைவு: இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
இதனையடுத்து, அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்த நிலையில், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.
அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் வைக்கப்பட்டு இருந்த பவதாரணியின் உடல் இன்று தேனி வந்தது. பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது. 12 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு நடக்கிறது.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…