சைலண்டாக சம்பவம் செய்யும் ‘போட் ‘! யோகி பாபுவுக்கு பிளாக்பஸ்டர் ரெடி!!
போட் : இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ போட் ‘. இந்த திரைப்படத்தில் கௌரி கிஷான், ம்.ஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த். ஜெஸ்ஸி போஸ் ஆலன், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா. ஷ்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இருந்தது. எனவே, படம் பார்க்க ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், படம் பார்த்த பிரபலங்கள் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை இன்னுமே அதிகமாக்கியுள்ளனர்.
படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கங்களில் ” இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள போட் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.இரண்டாம் உலகப்போருக்கு பயந்து கடலுக்குள் பயணிக்கும் ஒரு படகில் பல்வேறு விதமான, முரணான மனிதர்கள், பயணிக்கும் போது ஏற்படும் கருத்து மோதல்களை சிம்புதேவன் அரசியல் பகடியை நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார்.
கடலும் கடலில் பயணிக்கும் படகும் படமாக்க கடினமான மிகச் சவாலான திரைப்படம். அழகான முயற்சி. ஜிப்ரானின் இசை நம்மை படகோடு பயணிக்கவைக்கிறது. சிம்புதேவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அதைப்போல, இயக்குனர் அறிவழகன் போட் படத்தினை பார்த்துவிட்டு ” ஆஹா! அனுபவமிக்க திரைப்படம் போட் என்று நான் சொல்ல முடியும். இயக்குனர் சிம்பு தேவனின் தற்போதைய சூழ்நிலையையும் பிரதிபலிக்கும் பல பல்துறை கதாப்பாத்திரங்களுடன் ஒரே படகில் அரசியல் நையாண்டியை கையாள்வதில் அவரது சிறந்த படைப்பு இது.
ஒற்றை மேற்கோளில், “அரசியல் இந்தியாவைப் படியுங்கள் & படகைப் பாருங்கள் அல்லது படகைப் பாருங்கள் & அரசியல் இந்தியாவை நீங்கள் அறிவீர்கள்” என்று என்னால் சொல்ல முடியும், இது சிறப்பாகச் செய்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் பார்க்க வேண்டிய பாராட்டுக்கள். போட் வெற்றிக் கரையை அடையட்டும்” என தனது விமர்சனத்தை கூறியுள்ளார். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள காரணத்தால் கண்டிப்பாக யோகி பாபுவுக்கு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.