நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தையும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்கில் வைத்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் எச்.வினோத் மற்றும் நிரவ்ஷா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் படத்திற்கான தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…