கொலை நடுங்க வைக்கும் அடுத்த குரூப்.! வெகு விரைவில்… வெளியான அந்த அறிவிப்பு.!
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான “ஸ்க்விட் கேம்” தொடர் வெளியான சில நாட்களிலேயே உலகமெங்கும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த தொடரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை நடுங்க வைத்தது என்ற கூறலாம்.
முதல் சீசன் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இதன் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் ஸ்க்விட் கேம் சீசன் 2 வருவது உறுதி என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு சீசன் 2 அப்டேட்டை ஒன்று கிடைத்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இயக்குனர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ” கடந்த ஆண்டு வெளியான ஸ்க்விட் கேம் கதையை எழுத எனக்கு 12 வருடம் ஆனது. ஆனால், ஷுட்டிங்கை 12 நாளிலே முடித்துவிட்டோம். இதற்கு கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. விரைவில் ஸ்க்விட் “கேம் சீசன் 2” வருகிறது என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் ரிலீஸ் தேதியை கேட்டுவருகிறார்கள்.
Red light… GREENLIGHT!
Squid Game is officially coming back for Season 2! pic.twitter.com/4usO2Zld39
— Netflix (@netflix) June 12, 2022