Ilayaraja Biopic தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவருடைய வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகரும் இளையராஜாவின் தீவிர ரசிகருமான தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.
இந்த நிலையில், தான் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிட்டார் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு ஒரு படத்தின் அப்டேட் வரும் என கூறியிருந்தார். ஹிட்டாருடன் அந்த புகைப்படம் வெளிவந்த காரணத்தால் பலரும் இது இளையராஜாவின் வாழ்கை வரலாற்று படம் தான் என்று கண்டுபிடித்து விட்டார்கள். படத்தை தயாரிப்பது யார், இயக்குனர் யார் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் தனுஷ் நேற்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் தான் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராக்கி, சாணிக்காகிதம் , கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாவே இசையமைக்கிறார். படத்தை கனெக்ட் மீடியா – பிகே பிரைம் ப்ராட் – மெர்குரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
மேலும், இந்த திரைப்படத்திற்கான பூஜை ஒரு விழாவாக சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ், இளையராஜா, அருண் மாதேஸ்வரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடைபெற்றது விரைவில் படத்தின் தலைப்பு என்னவென்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…