பாரதி ராஜா : 80,90 காலாட்டத்தில் முன்னணி இயக்குனராக கலக்கி வந்த பாரதி ராஜா பல நடிகைகளை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக உதவி செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. பாரதி ராஜா இயக்கத்தில் வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகம் ஆனார்.
இந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் ஆனார். ஆனால், ஒரு முறை கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த சமயத்தில் வடிவுக்கரசிக்கும் இயக்குனர் பாரதி ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த பிரச்சனையின் போது ஒரு கட்டத்தில் ரொம்பவே கடுப்பான பாரதி ராஜா செருப்பை எடுத்து தன்னுடைய தலையிலே அடித்து கொண்டாராம்.
கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க வடிவுக்கரசி கமிட் ஆன போது ஒரு முறை படப்பிடிப்புக்கு வரும் படி இயக்குனர் பாரதி ராஜா கூறினாராம். பின் அவரும் ரயில் ஏறி படப்பிடிப்புக்கு சென்றாராம். அன்று வடிவுக்கரசிக்கு பிறந்த நாள் என்பதால் கையிலே இனிப்பு எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் இருந்த அனைவர்க்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாராம். பிறகு பாரதி ராஜா வடிவுக்கரசியை அழைத்து நீ நடிக்கும் இந்த கதாபாத்திரம் படத்தில் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினாராம்.
இதனால் ரொம்பவே கடுப்பான நடிகை வடிவுக்கரசி பாரதி ராஜாவுடன் சண்டைபோட தொடங்கினாராம். அந்த சமயம் வடிவுக்கரசிக்கு விஜயகுமார் எதாவது சொல்லி தன்னுடைய கதாபாத்திரத்தில் மஞ்சுளா நடிக்கிறார் போல என்று தோணுவிட்டதாம். இதனை சொல்லியே வடிவுக்கரசி பாரதிராஜாவிடம் சண்டைபோட்டாராம். பிறகு பாரதி ராஜாவும் சற்று கடுப்பாகி தன்னுடைய செருப்பை கழட்டி தன்னுடைய தலையில் அடித்து கொண்டு இந்த படத்தில் உன்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரவைத்து வைத்து நான் எடுத்தால் என்னை செருப்பால அடி என்று கூறி அடித்து கொண்டே இருந்தாராம்.
பிறகு வடிவுக்கரசியிடம் நீ கோப படாமல் ரூமில் போய் இரு நான் இரவு முடிவு செய்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறினாராம். அதனை தொடர்ந்து நடிகை வடிவுக்கரசி நீங்கள் என்ன என்னை தேர்வு செய்வது நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம். இந்த தகவலை நடிகை வடிவுக்கரசியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…