படப்பிடிப்புக்கு லேட்டா வந்த பிரபல நடிகை! எம்.ஜி.ஆர் செஞ்ச விஷயம்?

M.G.R : படப்பிடிப்புக்கு லேட்டா நடிகை வந்தபோது எம்.ஜி.ஆர் நடந்துகொண்ட விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் . எனவே, அந்த சமயமெல்லாம் எம்ஜிஆர் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் அவருக்கு முன்னதாகவே பயத்தில் வந்து காத்திருப்பார்களாம். அனைவரும் எம்.ஜி.ஆருக்காக தான் காத்திருப்பார்கள்.
ஆனால், எம்ஜிஆரே அந்த சமயம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகைக்காக காத்திருந்தாராம். அந்த நடிகை வேற யாருமில்லை எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்த நடிகை சரோஜாதேவி தான். சரோஜாதேவி எம்ஜிஆர் உடன் ‘திருடாதே’ படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம். அந்த சமயம் தான் எம்ஜிஆருக்கு காலிலும் அடிபட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தாராம்.
அந்த ஒரு வருடத்தில் சரோஜாதேவி பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக ஆகிவிட்டார். பிறகு கால்சீட் பிரச்சினை காரணமாக மிகவும் சரோஜாதேவி அந்த சமயம் பிஸியாகவும் இருந்தாராம். அதன் பிறகு எம்ஜிஆர் ஒரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு 7 மணிக்கு வந்து அமர்ந்து இருந்தாராம்.
ஆனால் சரோஜாதேவி மிகவும் தாமதமாக வந்தாராம். அந்த நாளில் எம்ஜிஆருக்கும் அவருக்கும் டூயட் காட்சியும் எடுக்கப்படவிருந்ததாம். எனவே தாமதமாக வந்ததால் எம்ஜிஆர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக சரோஜாதேவிக்காக காத்திருந்தாராம் . ஆனால் சரோஜாதேவி எம்ஜிஆர் நமக்காக காத்திருக்கிறார் என சற்று பயத்துடனே உள்ளே சென்று எம்ஜிஆர் வணக்கம் போட்டுவிட்டு வேகமாக உள்ளே சென்றாராம் .
அந்த நாளில் டூயட் கட்சி எடுக்கும் போது கூட சரோஜாதேவி மிகவும் பயத்தில் முகத்தை கவலையுடன் வைத்திருந்தாராம். எதற்காக டூயட் காட்சியில் இப்படி முகத்தை வைத்திருக்கிறீர்கள் கொஞ்சம் சிரித்தால் தான் டூயட் காட்சி நன்றாக வரும் என்று எம்ஜிஆர் சரோஜாதேவியிடம் கூறினாராம். அதைப்போல நீங்கள் தாமதமாக வந்ததை நான் கவனித்தேன் ஆனால் அதனை அப்போதே மறந்து விட்டேன் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை கவலையை விட்டுவிட்டு ஒழுங்காக நடிங்கள் என்று கூறினாராம். இந்த தகவலை சரோஜா தேவியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025