உதவி கேட்ட சேசுவுக்கு…வெறும் ரூ.500 அனுப்பிய நடிகர்! கொந்தளித்த பிரபலம்….

Published by
கெளதம்

Lollu Sabha Seshu: ‘அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் சேசு, கடந்த 26ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலருக்கு மாரடைப்பு வருவது தொடர் கதையாகி வருகிறது. உணவு, தூக்கத்தை மறந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பால் சில நடிகர்கள் மறைந்தனர், அதன் வரிசையில் இப்பொழுது நகைச்சுவை நடிகர் சேசுவும் நம்மை விட்டு சென்றுவிட்டார். விஜய் டிவி-ன் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேசு, நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், அண்மை காலமாக நடிகர் சந்தானத்தின் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடைசியாக சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.

60 வயதான நடிகர் சேசுவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மறைந்தார். இவரது மறைவு தமிழ் சினிமாவில் சோகத்தில் ஆழ்த்தியது.  சேசு இருப்பதற்கு முன், அவர் மருத்துவமனையில் இருக்கும்பொழுது சில பிரபலங்கள் அவருக்காக பண உதவி கேட்டு வீடியோக்கள் வெளியிட்டு இருந்தனர்.

இவ்வாறு உயிருக்கு போராடி வந்த சேசுவுக்கு பிரபல நடிகர் ஒருவர் google pay -ல் வெறும் 500 ரூபாய் அனுப்பிருக்கிறார். இது தெரிந்து கொந்தளித்து பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, இது தான் ஒரு மனிதரோட மதிப்பு…பணம் என்று கேட்டு போனால் இப்படி தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

8 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

10 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

11 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

13 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

13 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

14 hours ago