செக் மோசடி வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்.!
செக் மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி இறால் பண்ணை அதிபரை ஏமாற்றியதாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இறால் பண்ணை அதிபரிடம் கடன் வாங்கும் ஆவணத்திற்கு ரூ.14 லட்சம் செலவு அவதாக கூறி பணம் பெற்றுள்ளார். பின்னர், போலி செக் ஒன்றை வழங்கியுள்ளார். நாளடைவில் பணம் கொடுக்காமலும், அதற்காக வாங்கிய ரூ.14 லட்மும் திருப்பி கொடுக்காமல் இருந்ததால், அதிர்ச்சியடைந்த முனியசாமி பவர் ஸ்டார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
2023 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்! ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ?
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று விசாரணைக்கு வந்துள்ளது. முன்னதாக, 2 முறை வாய்தா பெற்றதோடு இன்றும் விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.