சிறகடிக்க ஆசை சீரியல்- செய்வினையை எடுக்க விஜயா மனோஜ் செய்த செயல் ..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 3] எபிசோடில் விஜயா மனோஜை பார்த்து குடும்பமே சிரித்தது.
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 3] எபிசோடில் விஜயா மனோஜை பார்த்து குடும்பமே சிரித்தது.
ஷோரூமில் முட்டை வைத்தது யாரென அறிந்த மனோஜ் ;
விஜயாவும் மனோஜும் தீச்சட்டி எடுப்பதற்காக கோவில் வந்திருக்காங்க.. மனோஜ் வேப்பிலை டிரஸ் போட்டுட்டு பக்தி பரவசமா வர்றாரு.. விஜயாவும் பார்க்க அம்மன் மாதிரியே இருக்காங்க ..இதெல்லாம் பாக்குற ரோகிணிக்கும் பார்க் ஃபிரண்டுக்கும் சிரிப்பா வருது.. தீச்சட்டிய வாங்குன மனோஜ் சூடு பொறுக்காம ஓடுறாரு.. உடனே விஜயா டேய் நில்லுடா மெதுவா நடந்து போகணும்.இந்த நேரத்துல முத்து மீனாவும் கோவிலுக்கு வராங்க .இதை பார்த்த மீனா என்ன பண்றாங்க இவங்க இதுக்கு தான் விரதம் இருக்கிறேன்னு சொன்னாங்களா.. இப்ப முத்து அவங்க ரெண்டு பேரையுமே வீடியோ எடுக்குறாங்க.. வீட்டுக்கு போற முத்து அண்ணாமலைய பார்த்து அப்பா நீ இன்னைக்கு நல்லா சிரிக்க போற அதுக்கு நான் கேரண்டி.. அதுக்கு ரவி சொல்றாரு என்ன கிச்சு கிச்சு மூட்ட போறியா.. இல்லடா இதோ நான் வீடியோ போடுறேன் எல்லாரையும் கூப்பிடு.. விஜயாவும், மனோஜும் ஷாக்கா பாத்துட்டு இருக்காங்க..
வீடியோவை பார்த்த அண்ணாமலை ,ரவி, சுருதி எல்லாரும் பயங்கரமா சிரிக்கிறாங்க.. ஒரு கட்டத்துல மீனாவுக்கும் சிரிப்பு வந்துருது.. இப்ப மனோஜ் சாமி விஷயத்தை யாரும் கிண்டல் பண்ணாதீங்க அப்படின்னு சொல்றாரு. விஜயாவும் வேண்டுதலுக்காக பண்ணுனோம் அப்படின்னு சொல்ல அதையும் மீறி எல்லாருமே சிரிக்கிறாங்க ..இப்போ அண்ணாமலை கேக்குறாரு ..ஏன்டா என்னடா ஆச்சுன்னு அதுக்கு மனோஜ் சொல்றாரு ..கடையில யாரோ செய்வினை வச்சுட்டாங்கப்பா.. சாமியார்கிட்ட போனோம் ஒரு பரிகாரம் செய்ய சொன்னாரு. உடனே அண்ணாமலை சொல்றாரு ..செய்வினை, சூனியம் எல்லாமே மூடநம்பிக்கை தெய்வ சக்தியை மட்டும் நம்புங்க.. உன்னை எவ்வளவு படிக்க வச்சேன் ஆனா நீ சுயமா சிந்திக்கவே மாட்ற அப்படின்னு சொல்றாரு.
இப்போ மனோஜ் ஷோரூம் ல இருந்து மனோஜோட ஒர்க்கர் வர்ராரு .. சார் அந்த முட்டை வச்சது யாருன்னு கண்டுபிடிச்சாச்சு . மனோஜ் ஆவலோட அது யாரு அப்படின்னு கேட்க அதற்கு அவர் சொல்றாரு.. பக்கத்து ஏடிஎம் செக்யூரிட்டி தாத்தா தான் ..அவங்க பேரன் கூட நேத்து முட்டை வாங்கிட்டு வந்தாங்களாம்.. அப்போ மழை வருதுன்னு ரெண்டு பேரும் ஒதுங்கி இருக்காங்க அந்த சின்ன பையன் விளையாட்டா அந்த முட்டையில கண்ணு வரைஞ்சு இருக்கிறான் மழை நின்னுதும் முட்டையை மறந்து விட்டுட்டு போய்ட்டாங்க.. மத்தபடி அது நல்ல முட்டை தான் சார் மறுபடியும் வந்து அவரு கேட்டாரு அப்படின்னு சொல்ல குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்கிறாங்க இதோட இன்னைக்கு எபிசோடை முடிச்சு இருக்காங்க .நாளைக்கு ப்ரோமோல பார்வதி மீனா கிட்ட ரோகிணி பணம் கொடுத்த விஷயத்தை சொல்லிட்டு இருக்காங்க. மீனாவும் நிஜமாதான் சொல்றீங்களா அப்படின்னு கேக்குறாங்க..