Categories: சினிமா

96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…

Published by
மணிகண்டன்

Oscars : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Read More – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கிய ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற திரை கலைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தாண்டு ஆஸ்கர் விருது பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனின் ஒபன்ஹைமர் திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

புவர் திங்ஸ் 11 விருதுகளுக்கும், பார்பி 8 விருதுகளுக்கும் , கில்லர்ஸ் ஆஃப் பிளவர் மூன் 10 விருதுகளுக்கும், மாஸ்டரோ திரைப்படம் 7 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஓபன்ஹைமர் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ராபர்ட் டவுனி ஜூனியருக்கு (அயர்ன் மேன் நாயகன்) சிறந்த துணை நடிகருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் இவர் வாங்கும் முதல் ஆஸ்கர் விருதாகும். சிறந்த துணை நடிகை விருது தி ஹோல்டோவர்ஸ் திரைப்படத்தில் நடித்த டிவைன் ஜாய் ராண்டால்ஃப் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

Read More – மக்களவை தேர்தல்..! சிவகங்கை தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட விருப்ப மனு

20 டேஸ் இன் மரியுபோல் எனும் அமெரிக்க ஆவண படம் சிறந்த ஆவணப்படம் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. இந்த பிரிவில் பிரியங்கா சோப்ரா தயாரித்த கில் அ டைகர் ஆவண திரைப்படம் விருதை பெறவில்லை.

தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப் சிறந்த ஆவணப்பட குறும்பட விருதை வென்றுள்ளது. புவர் திங்ஸ் திரைப்படம் சிறந்த ஆடை மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை பெற்றது.  அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதை விருதை வென்றுள்ளது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி பாய் அண்ட் தி ஹெரான்’ வென்றது.

ஓபன்ஹைமர் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் வென்றுள்ளது. ஹோய்ட் வான் ஹொய்டெமா இந்த விருதை பெறுகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago