5 மணி ஷோக்கள் அதன் மதிப்பை இழந்து விட்டது : நடிகர் விஷால்

Default Image
  • அதிகாலை 5 மணி ஷோக்கள் அதன் மதிப்பை இழந்து விட்டது.
  • எல்.கே.ஜி படமும், ஓவியா நடித்துள்ள அடல்ட் படமான ’90ml’ படமும் அதிகாலை 5 மணி அளவில் திரையிடப்படவுள்ளது.
  • இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது
  • விஷாலின் ட்வீட்டுக்கு ரசிகர்கள் பதில் ட்வீட்

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘அதிகாலை 5 மணி ஷோக்கள் அதன் மதிப்பை இழந்து விட்டது. ‘ என கூறியுள்ளார்.

வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அரசியல் படமான எல்.கே.ஜி படமும், ஓவியா நடித்துள்ள அடல்ட் படமான ’90ml’ படமும் சென்னை போன்ற சில இடங்களில் அதிகாலை 5 மணி காட்சி திரையிடபப்ட உள்ளது.

இந்நிலையில், இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுவதால் தியேட்டர் நிர்வாகம் காலை காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதனை இரு படக்குழுவினரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரசிகர்கள் கூறுகையில், இதனை குறிப்பிட்டுதான் விஷ்ணு விஷால் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளாரா என ரசிகர்கள் கமென்டில் கூறி வருகின்றனர். பலர் ‘பொறாமையில் பொங்காதீர்கள்’ என்பது போல ரிப்ளே செய்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்