“தாத்தா வராரு கதறவிடப் போறாரு”.. வெளியானது இந்தியன் 2 படத்தின் 3வது பாடல்.!

Default Image

இந்தியன் 2 : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 3ஆவது பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. ‘கதறல்ஸ்’ என்ற இந்தப் பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பெப்பி பாடலில் உணர்வுகளுக்கு ஏற்றவாறு, ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘பாரா’ பாடல் போலவே இந்தப் பாடலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படமானது வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமல், சித்தார்த் மற்றும் ராகுல் தவிர, நடிகை காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
mother dog carries
Vinayakan
tamilisai soundararajan about vijay
tamilisai soundararajan
kantara chapter 1
seeman