சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பு வீடியோ நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகவுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இந்தாண்டு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிள் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் 2 இரண்டாவது சிங்கிள் நாளை (மே 23) காலை 11:07 மணிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
முன்னதாக, புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள ‘ஓ சாமி பாடல்’ பெரிய ஹிட் ஆனது. இப்போது, ராஷ்மிகா தனது புஷ்பாவுடன் ஸ்ரீவல்லியாக மீண்டும் ஒருமுறை வரவுள்ளதால், அந்த காம்போ எப்படி இருக்கும் என்றும், இந்த காதல் பாடலும் அதே ரேஞ்சில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அனசூயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…