வருகிறாள் ஸ்ரீவள்ளி.. ‘புஷ்பா 2’ படத்தின் 2வது பாடல் அறிவிப்பு.!

சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பு வீடியோ நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகவுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இந்தாண்டு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிள் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் 2 இரண்டாவது சிங்கிள் நாளை (மே 23) காலை 11:07 மணிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அனசூயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.