‘அந்த ஒரு வித்தை தான் …’! ரஜினி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி .!!

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ‘ட்ரெயிலர்’ வெளியாகி திரில்லர் படம் விரும்பி பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவனம் கவர்ந்துள்ளது.
மேலும், வரும் ஜூன்-14ம் தேதி இந்த படமானது திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ரீலிசுக்கான வேலை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் படத்தின் பிரமோஷன்களில் தற்போது விஜய் சேதுபதி , அவருடன் படக்குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பிரமோஷன்களில் தமிழ் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் உண்டான சில சுவாரஸ்யங்களை விஷயங்களையும் விஜய் சேதுபதி பகிர்ந்து வருகிறார்.
அதன்படி முன்னதாக பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. அது குறித்து பத்திரிகையாளர்கள், ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டபோது, அவர் கூறியதாவது, “நான் மிகவும் வியந்து பார்க்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். அவர் இந்த வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் வித்தையை வைத்திருக்கிறார். அவருடன் நடிக்க கிடைத்த அந்த வாய்ப்பை நான் எப்படி தவற விடுவேன்” , என்று கூறி இருந்தார்.
ரஜினி குறித்து விஜய் சேதுபதி தான் விரைவில் இயக்குநராகவும் மாறுவேன் எனவும் அவர் கூறி இருந்தார். ஜூன்-14 ம் தேதி வெளியாக இருக்கும் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ஓடி முடித்த விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025
பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!
March 25, 2025