இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் பிரமாண்ட ஹிட் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வது பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரம்மானந்தம், எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தினை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று (ஜூலை 12)- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு அவர்கள் சொன்ன விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ” இந்தியன்2 படம் ஒரு மோசமான திரைப்படம். இந்த படம் உருவாக்குவது மன்னிக்கப்படலாம், ஆனால் ஒரு பெரிய சின்னமான கதாபாத்திரத்தை படுகொலை செய்வதை மன்னிக்க முடியாது. ஷங்கரின் சிறந்த மற்றும் மோசமானது இப்போது இந்தியன் படங்கள் தான். இது ஒரு பெரிய ஏமாற்றம்” என கூறியுள்ளார்.
படத்தை பார்த்த மற்றோருவர் “கண்ணியமான கதையை கையில் வைத்திருக்கும் ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒரு படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் தற்போதைய டிரெண்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் என்ன நடக்கும்? பதிலை அறிய இந்தியன்2 பார்க்கவும். பல பாகங்களாக படம் எடுக்க நினைக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த படம் ஒரு கேஸ் ஸ்டடியாக இருக்க வேண்டும்.
கமல்ஹாசன் படத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. க்ளைமாக்ஸின் போது ‘சிக்ஸ் பேக்ஸ்’ அபி சண்டைக் காட்சியை அவரது ரசிகர்கள் விரும்பலாம்.மொத்தத்தில் இந்தியன்2 & ஷங்கர் ஏமாற்றம்” என் கூறியுள்ளார்.
மற்றோருவர்”அதிர்ச்சி! #இந்தியன்2 படத்திற்கு வெளிநாடுகள் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன” என கூறியுள்ளார்.
மிகவும் காலாவதியான படம். பிரம்மாண்டமான காட்சிகள், படைப்பாற்றல் இல்லை, பின்னணி இசை ஓகே.எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்கோப் இல்லை. முழுவதும் பயங்கரமான காட்சிகள். கிளைமாக்ஸ் ஃபைட் மட்டும் தான். ஷங்கர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்” என கூறியுள்ளார்.
மற்றோருவர் “இந்தியன்2 ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசன், சித்தார்த், விவேக் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோரின் சிறப்பான நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. ஷங்கர் படத்தில் கதை சொன்ன விஷயம் மயக்க வைக்கும் காட்சிகள் கண்டிப்பாக பார்க்கும் ஆவலை தூண்டுகிறத” என கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…