ஐயோ…! நம்ம பூஜா ஹெக்டேக்கு என்னாச்சு? ஷாக் கொடுத்த அந்த புகைப்படம்….
முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது, ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படத்தில் படித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார்.
இது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் காலில் அடிபட்ட புகைப்படத்தை வெளியிட்டு தசைநார் கிழிந்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில்,த்ரிவிக்ரம் – மகேஷ் பாபு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே.
இதையும் படிங்களேன் – சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு.? குழப்பத்தில் ரசிகர்கள்…
சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் இருந்து நேற்று, அவரது கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு “ஸ்பாட்லைட் என் மீது உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.