அது ரொம்ப பயம்..அந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்…அலறும் அனிருத்.!!
தமிழ் சினிமாவில் தற்போது மார்க்கெட்டிங் உச்சத்தில் இருக்கக்கூடிய இசையமைப்பாளர் என்றால் அனிருத் என்று கூறலாம். சமீபகாலமாக வெளியான பல பெரிய படங்களுக்கு அவர்தான் இசையமைத்திருந்தார். அதுபோல, இன்னும் வெளியாகவுள்ள பல பெரிய படங்களுக்கும் அவர்தான் இசையமைத்து வருகிறார்.
அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்களும் பெரிதளவில் பேசப்பட்டு வெற்றியடைந்து விடுகிறது. இப்படி பல ஹிட் பாடல்களையும் நல்ல பின்னணி செய்யும் கொடுத்து வரும் அனிருத் இதுவரை பேய் படங்களுக்கு ஒரு முறை கூட இசையமைத்ததே இல்லை. அதற்கான காரணம் என்னவென்ற குறித்து தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் பொதுவாகவே அனிருத்துக்கு பேய் பயம் அதிகமாக இருக்கிறதாம். எனவே, இதன் காரணமாக தான் இதுவரை அவர் இன்னும் பேய் படங்களுக்கு கூட இசையமைக்கவே இல்லையாம். பேய் பயம் இருப்பதால் அனிருத் தூங்கும் போது அமைதியாக இருக்கக் கூடாது என்பதற்காக பயத்துடன் ஏதேனும் வெப் சீரிஸ்களை தன்னுடைய லேப் டாப்பில் போட்டுக் கொண்டுதான் தூங்குவாராம்.
இதன் மூலம் இதுவரை எதற்காக அனிருத் பேய் படங்கள் இசையமைக்க வில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அனிருத் தற்போது விஜய் நடித்துவரும் லியோ, அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி, ஷாருகான் நடித்து வரும் ஜவான், ரஜினி நடித்த வரும் ஜெயிலர், கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2, போன்ற பெரிய பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.