நடிகை ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹன்சிகா வெளியீட்டு திருமணம் நடைபெறவிருப்பதை உறுதி செய்தார்.
இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு நடைபெறவுள்ள சில சுவாரஷியமான தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஹன்சிகா -சோஹைல் திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்கு முன்பு அதாவது டிசம்பர்- 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்கப்படவுள்ளதாம்.
இதனை தொடர்ந்து, அடுத்த நாளான டிசம்பர் 3-ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடைபெறவுள்ளதாம். பிறகு, அடுத்த நாள் காலை ஹல்டி நிகழ்வு நடக்க இருக்கும் நிலையில், அன்றைய தினம் மாலை (டிசம்பர் 4) ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான அரண்மனையில் வைத்து திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாம்.
மேலும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் அரண்மையில் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் செய்யப்பட்டும் வருகிறதாம். திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதால் பல சினிமா பிரபலங்கள் இவர்களது திருமணத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…