பர்ஸ்ட் லவ்-ஐ விட அதுதான் இனிமையானது…வெக்கப்பட்ட அசோக் செல்வன்.!

அசோக் செல்வன் தற்போது அசோக் செல்வன் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் ‘சபாநாயகன் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகைகள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் அசோக் செல்வன் ‘சபாநாயகன்’ திரைப்படம் குருத்து சிலவற்றை பகிர்ந்துகொண்டார்.
சபாநாயகன் படம் ஆட்டோகிராப் படம் மாதிரி இருக்காது, அதில் வெறும் காதல் மட்டுமே இருக்கும் என நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார். “முதல் காதலை விட முதல் க்ரஷ் இன்னும் இனிமையானது. எப்போதும் நம் மனதில் அதற்கு தனி இடம் இருக்கும்.
இந்தப் படத்தில் காதல் காட்சிகளைத் தாண்டி, நண்பர்களிடையேயான முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கிறோம். முதல் காதல், பள்ளிக்கூடம், வாழ்க்கை போன்ற அனுபவங்களை மறக்கவும் முடியாது, மனதில் இருந்து நீக்கவும் முடியாது. அதனை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.
லியோ படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அசோக் செல்வன்
நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025