இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் அருமையாக இருந்தது.
ஆனால், இந்த பாடலை அதிதி ஷங்கருக்கு முன்னதாக சூப்பர் சிங்கர் பிரபலம் பாடகி ராஜலட்சுமி பாடினார் என்றும் ஷங்கரின் மகள் என்பதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று பலரும் அதிதியை விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- கைதி 2 அப்டேட் கேட்டவர்களுக்கு தளபதி 67 கொடுத்த கார்த்தி.! ரகசியத்த இப்படி போட்டு உடைச்சிட்டிங்களே சார்….
இது தொடர்பாக ராஜலட்சுமி பேசியுள்ளார் அதில் “‘மதுரவீரன்’ பாட்டை நான் பாடினது உண்மைதான். அதிதி ரொம்ப நல்லா பாடுறாங்க. அதனால, அந்த பாடலை பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு அதிதியை தொடர்ந்து விமர்சிக்கிறது எனக்கு ரொம்ப… ரொம்ப… வருத்தமா இருக்கு. எனக்கு எந்த வருத்தமும் , கோபமும் இல்லை.
பொதுவா எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டை ரெக்கார்டிங் பண்ணும்போது நிறைய பாடகர்களைப் பாடவச்சிப் பார்ப்பாங்க. இது இயல்பா எப்பவும் நடக்குற விஷயம். அந்தக் கதைக்கு யாரோட குரல் கனகச்சிதமாக இருக்கிறதோ அவங்களைத்தான் தேர்வு செய்வாங்க. இப்படி ரொம்ப எதார்த்தமா நடக்குற விஷயத்தை பெரிசுப்படுத்தணும்னு அவசியமில்லை.
நமக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தா பாடிட்டு வரணும். அந்த பாட்டு ரிலீஸ் ஆகுமா, ஆகாத என்று கேக்குறது நாகரீகமான அணுகுமுறை இல்லை. எனக்கு இது ஒரு அனுபவம். என் குரல் இப்படித்தான் இருக்கும்னு யுவன் சார்கிட்ட பதிவு பண்ணிட்டேன். அதுவே, பெரிய விஷயம். அதுவே போதும்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…